Thursday, April 30, 2009

மனிதாபிமானம்!

ஒரு மாலை நேரம் .அந்த சாலையில் அவன் பல்சர் சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது வேகம் ஸ்பீடோ மீட்டரில் தொன்னூரைஐ தொட்டது .சிலர் கைகளை நீட்டி பைக்குகளில் வருபவர்களிடம் ‘லிப்ட் கேட்டு கொண்டிருந்தனர் .

ஒரு சிறுவன் கையில் பள்ளி புத்தக பையுடன் சோர்வாக கையை நீட்டி லிப்ட் கேட்டதை பார்த்ததுமே பல்சரின் வேகத்தை சற்று குறைத்தவன், திடிரென முன்பைவிட வேகமாய் ஆக்சிலரேட்டரை திருகி பறந்து சென்றான் .இதை பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் பக்கத்திலிருந்தவரிடம் “இங்க பாருயா எப்படி பறந்து போகுது ?இந்த சின்ன புள்ள மூஞ்சை பார்த்தும் கூட நிறுத்தி கூட்டிட்டு போகாமல் எப்படி பறக்குது பாரு கொஞ்சம் கூட "மனிதாபிமானமே" இல்லாம” என்று பொரிந்து தள்ளினார்....

பல்சரின் ஸ்பீடோ மீட்டர் முள்ளினை ஜீரோவோடு முத்தமிட செய்துவிட்டு பைக்கில் இருந்த அந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்குள் அவசர அவசரமாய் ஓடினான். அந்த கண்ணாடி ரூமில் இருந்து வெளிவந்த ஒரு வெள்ளைநிற உடை அணிந்த பெண் அந்த பார்சலை வாங்கிக்கொண்டு அவனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் உள்ளே சென்று கதவை சாத்திகொண்டாள்.

அரைமணிநேரம் கழித்து அதே அறையில் இருந்து ஒரு வெள்ளை கோட் அணிந்த ஒருவர் வெளியில் வந்து அவனிடம் பேசினார். மிஸ்டர் சிவா, ரோட்ல அடிப்பட்டு கிடந்த இந்த பையன் யாருனே தெரியாது அப்படி இருந்தும் அவனை அக்கறையோடு இங்கே ஹாஸ்பிட்டலில் சேர்த்து தேவையான மெடிசனையும் சரியான நேரத்திற்குள் உங்க உயிரை கூட பொருட்படுத்தாமல் வேகமாக வாங்கிட்டு வந்து அந்த பையனின் உயிரை காப்பாத்தியிருகிங்க. உங்களை போல "மனிதாபிமானம்" எல்லோருக்கும் இருக்க வேண்டும் சிவா, கங்கிராட்ஸ். சொல்லிவிட்டு கைகுலுக்கி சென்றார் அந்த டாக்டர்.

No comments: