Monday, January 28, 2013

யார் தீவிரவாதிகள் ?

அன்புள்ள இஸ்லாமிய நண்பர்களே... பாராளுமன்ற தாக்குதல் நடத்திய அப்சல் குரு ,மும்பை தாக்குதல் நடத்திய கசாப் சகாக்கள் ,கோவை தொடர் குண்டு வைத்தவர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் தீவிரவாதிகள் என்றா ? அல்லது இஸ்லாமியர்கள் என்றா? அமெரிக்காவா அல்லது ஆப்கானா? இது இந்தியா இங்கெதற்கு புனித போர் தாக்குதல்கள்...விஞ்ஞானத்தில் உரிமை மறுப்பு என்றால் ஏது அப்துல் கலாம் ? இசைத்துறையில் மறுப்பு என்றால் ஏது ஜாகிர் உசேன் தபெல்லாவும் ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்காரும் ...?நடிப்புலகில் உரிமை மறுப்பா என்றால் இந்தியாவிலேயே அதிகமாக சம்பாதிக்கும் ஷாருக்கானும் சல்மான் காணும் ஏது ? அரசியலில் மறுப்பா ? என்றால் நாட்டின் உயர்ந்த பதவியில் ஜாகிர் உசேன் முதல் அப்துல் கலாம் வரை ஏது ? விளையாட்டு மறுப்பு என்றால் அசாருதினும் ஜாகிர்கானும் ஏது ? பெண்கள் உரிமை மறுப்பு என்றால் சானியா மிர்சா ஏது ? கமல் ஹாசனை விடுங்கள் அவர் ஈழ தமிழகளுக்கு ஆதரவாக சிங்களரை எதிர்க்க புத்தர் வேஷம் போட்டு அவார்டுக்காக அடுத்த படம் எடுத்தாலும் எடுப்பார் ..நீங்களே சொல்லுங்கள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகளா? அல்லது முஸ்லிம்களா?
அப்படி நடந்த தாக்குதல்களிலும் போர்களிலும் இந்திய ராணுவத்தில் இருந்த முஸ்லிம் வீரர்களும் இறந்திருப்பார்களே அவர்களுகென்ன பதில் இருக்கிறது உங்களிடம்... அரசாங்கத்தின் ஓட்டரசியல் ,சில சுயநல அமைப்புகள் போன்றோரின் காரணமாக அற்ப விஷயங்களில்
விழுந்து விடாதிர்கள் ... விஸ்வரூபம் இப்போ பிரச்சனை அல்ல. அது வந்தாலும் வராவிட்டாலும் என் அன்பு நண்பர்களே தாக்ரேக்களையும் மோடிகளையும் நாட்டுப்பற்று கொண்ட இந்து இனம்பிரிபான் அதுபோல தாவ்வூத்களையும் ,கசாப்களையும் நீங்கள் காயிதே மிள்ளத்திடமிருந்த்ம் ,அப்துல் கலாமிடமிருந்தும் இனம் பிரிக்க வேண்டும்.. சினிமா மட்டும்மல்ல எந்த ஒரு விஷயத்தாலும் இனபிரிவும் வேண்டாம் ..இரத்த சிதறலும் வேண்டாம் ...கோவை சம்பவமும் வேண்டாம் ..குஜராத் சம்பவமும் வேண்டாம்.... இந்துவோ முஸ்லீமோ பிரிவினை நபர்களை ,சக்திகளை இனம் காணுங்கள் ....

நானும் என் பதக்கமும் ...

எங்கள் நிரந்திர அமைச்சர் "முனைவர் பொன்முடி"யின் கரங்களினால் பெற்ற பதக்கம்..

இயக்குனர் ( அரசியல்வாதி சீமான் அல்ல) சீமான் கரங்களினால்
"தமிழ் நேற்று இன்று நாளை" தலைப்பில் கவிதைக்காக பெற்ற கிரிஸ்டல் ஷீல்ட்.

என் கல்லூரி பிரசிடென்ட் அவர்களின் கரங்களினால் கட்டுரை போட்டிக்கான முதல் பரிசு...

நண்பர் திரு கோபிநாத்துடன் நண்பன் கோபி...

எங்கள் நிரந்திர "சேர்மன் திரு. ஜனகராஜ்" அவர்களுடன் விழுப்புர நகர கூடை பந்து கழகத்துக்காக

எனது ஸ்கிரிப்ட் ,இயக்கத்தில் ,நடிப்பில் பள்ளி நாடக போட்டியில் ...

சமூக ஆர்வலர் மருத்துவர் எழிலனுடன் ரத்ததான முகாமில்...

கல்லூரி மேடையில் எனது உரை...

என் தலைவர் கலைஞரின் அன்புத்தம்பி பேராசிரியர் சுப.வீ. அவர்களுடன் (ஒரு விவாததிற்கு பின்பு...)அருகில் சமூக சிந்தனையாளர்கள் அண்ணன் வெங்கட் ,அண்ணன் சசி ,அருண் ஷோரி,தம்பி பா.பா.

ங்கொக்கா மக்கா ஆண்ட்ராயிடு டோய் ...


Wednesday, December 05, 2012

ஹைக்கூ

"மடியில கணம்.
வழியில பயம்"

புள்ளத்தாச்சி பொம்பள
எங்க ஊரு ரோடு...!

Monday, December 03, 2012

மாற்றுத் திறனாளிகள் தினம் - (03-12-2012)


கண்பார்வை இல்லை.
கலங்கவில்லை அவர்கள் !
கற்கண்டு குரலால் ;கை மீட்டும் இசையால்
கண்கள் ஆயிரம் அவர்மேலே !

வாய் பேசமுடியவில்லை .
வாடிபோகவில்லை அவர்கள்!
விரல் அசைவு ஒவ்வொன்றும்

விதவிதமாய் கதைசொல்லும்!

கால்கள் இரண்டும் முடக்கம்.
கவலைகள் ஏதுமில்லை !
கால்களின் ஓட்டம்தான் நின்றன தவிர
கற்பனை ஓட்டங்கள் அல்ல!
கைகள் இரண்டும் காலாய் மாறி
கலக்கலாய் நடனமாடும்.
சுற்றிநிற்கும் மனிதரெல்லாம்
கையைத்தட்டி ரசிப்பதால்
வாழ்வது இவர்களல்ல !
இவர்கள் மூலம் கலையே!

சுத்தி பேசி வீணா போகும்
மனிதருக்கு நடுவில்
கத்தி பேசி பேனா விற்கும்
ரயில் தோழன் !

வேட்டு வைத்து பிழைத்து
வாழும், மனிதருக்கு நடுவில்
பாட்டு படித்து உழைத்து வாழும்
பண்பு தோழன் !

கண்ணடித்து காதல் தேடும்
நண்பர்கள் நடுவில்
கால்களிலே தேர்வெழுதும்
சாதனை தோழன்!

ஒல்லியாய் உடலும்
உறுப்பும் ஓய்ந்த பின்னும்
கில்லியாய் பறக்கும்
ஒலிம்பிக் வீரன் !

போற்றும் திறன்கள் மிகுந்து
இருக்க ; மாற்றுதிறன்கள்
என்று கூற மனமும் கூட
மறுக்கிறது !

உங்களுக்கான நாள் இன்று .
உழைப்பு, ஊக்கம் தன்னம்பிக்கை
என கற்றுக்கொள்ள உங்களில்
பாடங்கள் நிறைந்திருக்க
வாழ்த்து சொல்ல
வாய் சொல் வரவில்லை.
மாறாக ,இருப்பேன் என்றும்
உங்களை மதிக்கும் மாணவனாய் !

Saturday, August 18, 2012

நோக்கியா 6600


          அதிகாலை . சரியாக மணி ஐந்தை தொட்டதும் சிவாவின் நோக்கியா 6600 அலறத் தொடங்கியது . " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! "நேற்று நடு இரவு வரை கண் விழித்து டாக்குமென்ட் வொர்க்கெல்லாம் முடிச்சிட்டு சோர்வாய் தூங்கின சிவா, கோபத்தோடு செல்லை எடுத்து அலாரத்தை ஹாப் செய்துவிட்டு படுக்கையை விட்டு எழுந்து அடுத்தப் பணிக்கு ஆயத்தமானான்.

                 மணி 8.00. ஹோட்டல்  வசந்தபவன். முதல் இட்லியை முடித்துவிட்டு இரண்டாவதை பிடத் தொடங்கியபோது அவனின் நோக்கியா 6600 அலறியது.  " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! " வலது பேன்ட் பாக்கெட்டில் இருந்த போனை இடது கையால் எடுக்க முடியாமல் திணறினான். செல் போன் தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது. ச்சே "இந்த சனியனை எவன்டா கண்டு பிடிச்சது" என்று நொந்துகொண்டு ரெண்டு இட்லியோடு முடித்துவிட்டு கையை கழுவிவிட்டு ஒரு வழியாக போனை ஆன் செய்தான். மறுமுனையில் மானேஜர் .

"சார் குட் மார்னிங் சார்..."

குட்மார்னிங் .என்ன மிஸ்டர் சிவா போன எடுக்க இவ்வளவு நேரமா ?
நைன் தர்டிக்கு மீட்டிங் மறந்துட்டிங்களா? எங்கே இருக்கீங்க ?

"சார் சாரி சார் ...கிளம்பிட்டேன் சார் . வித் இன் பிப்டீன் மினிட்ஸ் ஐ வில் பே தேர் சார்."

"கெட் பாஸ்ட்" . போனை கட் பண்ணினார் .

           அண்ணா நகரிலிருந்து திருவான்மியூருக்கு அரைமணி நேரத்திற்குள் செல்லும் முனைப்போடு சென்னை ட்ராபிக்கை கிழித்துக்கொண்டு பறந்தது அவனின் பல்சர்.

        சரியாக கிண்டி ரயில் நிலையத்தை கடந்தபோது , " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! அவனின் நோக்கியா 6600 அலறியது. மானேஜர்தான் திட்ட போறாரு என்று நினைத்துக்கொண்டு  பைக்கை ஓரம்கட்டி விட்டு  அவசரஅவசரமாய் ஹெல்மெட்டை கழற்றினான். தொடர்ந்து  கத்திகொண்டே இருந்தது அவனின் நோக்கியா 6600  . இப்போது அவனுக்கு இந்த செல்போன் ,இந்த ரிங்க்டோன் மட்டுமில்லாமல் இந்த பாட்டில் நடித்த தமனாவின் மீதும் வெறுப்பு வரத்தொடங்கியது. டென்ஷனோடு செல்போனை ஆன் செய்து    பேசத்தொடங்கினான்.மறுமுனையில், "சார்,  ஐ.சி.ஐ.சி.ஐ லிருந்து கால் பன்றோம் " என்று வந்த குரலைக்கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்றான். கட் செய்துவிட்டு பல்சரை விரட்டினான்.

             ஹலோ  ஜென்டில்மென், ப்ளீஸ் "புட் யுவர்  மொபைல் இன் சைலன்ஸ் மோட்"   என்று கூறவிட்டு ஏதோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தது அந்த 'புளு' கலர் கோட்டும் 'ரெட்' கலர் டையும். கொஞ்ச நேரம் கழித்து சிவாவின்  நோக்கியா 6600 அலறத்தொடங்கியது . சைலன்சில் போட்டிருந்த அவன் வைபிரேஷனை ஆப் செய்யாததால் சத்தம் ஏதுமின்றி அவன் தொடையை நெருடியது. மீட்டிங் நடுவில் போனை எடுக்க முடியாமல் அவஸ்தைப் பட்டான் . மீட்டிங் முடிவதிற்குள் இதுமாதிரி ஒன்பதுமுறை அவன் தொடை  நெருடப்பட்டது. ஒருவழியாய் மீட்டிங் முடிந்தது. செல்லை எடுத்து கோபத்துடன் பார்த்தான். அந்த ஒன்பது மிஸ்டு காலும் ப்ரியா என்று இருந்தது.ஒரு வித பயத்துடன்  ப்ரியாவிற்கு கால் செய்தான் .ஆனால் அவள் போனை எடுக்கவில்லை .தொடர்ந்து பண்ணிக்கொண்டே இருந்தான் .ஆறாவது அட்டம்ட்டில் வெற்றிபெற்றான். அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தான் 'சாரிமா' செல்லம் மீட்டிங்கில் இருந்தேன், அதான் எடுக்க முடியலை .அந்தப்பக்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும்  கெஞ்ச ஆரம்பித்தான் .இருபத்திமூன்றாவது சாரிக்கு பின்  அவள்  சமாதானம் அடைந்தாள்.நாளை சந்திப்பதாக கூறிவிட்டு அலுவல் பணியில் மீண்டும் மூழ்க ஆரம்பித்தான்.

         மதியம் மூன்றுமணி.  " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! " அவனின் நோக்கியா 6600 அலறியது .அய்யோ, ஒரு பத்து நிமிஷம் கூட விடமாற்றாங்களே. இந்த போனை  உடைச்சி எங்கேயாவது போடணும் என்று முனங்கிக்கொண்டே , போனை  எடுத்து ஆன் செய்தான் மறுமுனையில் ..சிவா சாருங்களா?
எஸ் ...
சார் ,"இந்த மாசம் லோன் டீவ் இன்னும் கட்டல " அந்த வங்கி பெண் கூற...
ஒகே மேடம் ஐ வில் கம் இந்தி ஈவினிங் ...சொல்லிவிட்டு சோர்வாய் அமர்ந்தான்.. எல்லா பணிகளையும் முடித்துவிட்டு  வீட்டுக்குள் நுழையும் போது மணி இரவு எட்டு .

                    வீட்டுக்குள் நுழைந்தவுடன் ...சாமி, எவனாவது கால் பண்ணி இம்சை கொடுக்கறதுக்குள்ள இந்த போனை சுவிட்ச் ஆப்  பண்ணிடனும் என்று நினைத்து போனை எடுக்கவும் அவனின் நோக்கியா 6600 அலறவும் சரியாய் இருந்தது .ச்சே, யாருடான்னு பயந்துக்கொண்டே போனை பார்த்தவன் நிம்மதியடைந்தான் .டிஸ்ப்ளேயில் அம்மா என்றிருந்தது .போனை ஆன் செய்து இவன் ஹலோன்னு சொல்லும் முன்பே அந்தப் பக்கம் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. "சிவா எப்படி பா இருக்க ? சாப்டியா பா ? 
ஆபிஸ்ல இருந்து வந்துட்டியா பா? "அம்மா பாசத்தை வாரி தெளித்துக்கொண்டிருக்கும் போதே  தங்கச்சி போனை பிடுங்கி பேச ஆரம்பித்தாள். "அண்ணா எப்படினா இருக்க? போன வாரம் வரேன்னு சொல்லிட்டு ஏனா  வரல?  உன் பிறந்தநாளுக்கு உனக்கு பிடிச்ச புளு கலர் ஜீன்ஸ் வாங்கி வச்சிருக்கோம் அண்ணா கண்டிப்பா வந்திடுனா". அண்ணா  பப்லு பேசறான் என்று சொல்லிவிட்டு பப்லுவிடம் போனை தந்தாள். அக்காவின் ஐந்து வயது குழந்தை தெத்தித் தெத்தி பேசியது ," மாமா சாப்டியா ? மாமா சைக்கிள் வாங்கினு வா மாமா". இந்தா அம்மாட்ட கொடுக்குறேன் .அக்கா பேச ஆரம்பித்தாள் "டேய் சிவா எப்படிடா இருக்க? உடம்பு சரியில்லைன்னு சொன்னியே இப்போ எப்படி டா இருக்கு. இந்த வாரம் ஒரு நாலஞ்சி நாள் லீவு போட்டுட்டு வாடா .நல்லா சாப்டுடா" .இந்தா அப்பாட்ட  பேசுனு சொல்லி அப்பாவிடம் கொடுத்தாள். அப்பா பேச ஆரம்பித்தார். "டேய்,சிவா எப்படிப்பா இருக்க ? வேலை எல்லாம் எப்படிடா இருக்கு. பணம் ஏதாவது வேணுமாடா ? உடம்ப பார்த்துக்கோப்பா . அப்புறம் உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கப் போறோம் ; லவ்வு கிவ்வு ஏதாவது இருந்தா சொல்லிடுடா முடிச்சி வச்சிடுறோம்" னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தார். இப்படியே சிரிப்பும் வனப்புமாய் அரைமணி நேரம் கழிந்தது . சரிப்பா நான் கண்டிப்பா அடுத்த வாரம் ஊருக்கு வருவேன்னு சொல்லிவிட்டு  போனை ஆப் செய்தான் சிவா . இப்போது  அவன் மனம் நிறைவாய் ஆனது . ஒரு நீண்ட புன்னகையுடன் கையில் பார்த்தான் ; அவனுடன் சேர்ந்து சிரித்தது அவனின் "நோக்கியா 6600"  .

Wednesday, August 15, 2012

மவுன ராகம்

                      நான் அவளைக் காதலிக்கிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள். .இது எனக்கு தெரியும். ஆனால் அதை அவள் என்னிடம் சொல்லாமல் மவுனம் காக்கிறாள். அவளின் மவுனத்தை கலைத்து, எப்படியாவது அவளாகவே தன் காதலை முதலில் சொல்ல வைக்கவேண்டும் என்று நானும் காத்திருந்தேன்.

          அன்று ஞாயிறு. அவள் எனக்கு போன் செய்தாள்,சிவா "போரடிக்குதுடா ஏதாவது 'டிவிடி' வாங்கிட்டுவாடா". அவள் இப்படி சொன்னதும் எனக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது . இன்று எப்படியாவது அவளின் மவுனத்தை கலைத்து காதலை  வாங்க வேண்டும் என்று .அதற்கு ஏற்றவாறு நல்ல காதல் படத்தை வாங்கிகொண்டு அவள் வீடு நோக்கி நடந்தேன். படம் "மவுன ராகம்" .

                    இருவரும் அருகருகே உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தோம் . எனக்கு படத்திலே கவனமே செல்லவில்லை, அவளையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவள் படத்தை  ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள். படத்தின் இறுதியில் ரேவதி மோகன் மீது வந்து விட்ட தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்து இவள் உண்மையிலேயே கண் கலங்கிவிட்டாள். இதுதான் சமயம் என்று நான் சைடில் பிட்டைப்போட ஆரம்பித்தேன்," ச்சே,  இந்த ரேவதி ஏன் இப்படி மவுனமா இருக்காள்? மோகன் மீது உள்ள காதலை வாயைத் தொறந்து சொல்லிவிட வேண்டியதுதானே ? இந்த பொண்ணுங்களே இப்படிதான் " .நான் சொல்லியதை கேட்டும் அவள் மவுனமாகவே படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
                          கிளைமாக்ஸ்சில் , மோகனும் ரேவதியும் சேர்ந்ததைப்பார்த்து இவள் முகம் லேசா மலர்ந்தது .படம் கண்டிப்பாக அவளை பாதித்திருந்தது. கண்டிப்பாக அவள் மவுனத்தை கலைத்து காதலை சொல்லிவிடுவாள் என்று என் மனம் சொல்லியது. .ஒருவழியாக படம் முடிந்தது .அவள் மவுனமும் கலைந்தது. அவள் சிவா என்று என்னை அழைத்தாள்.நான் மனதுக்குள் ஆனந்தமானேன். அவள் தொடர்ந்து பேசினாள். சிவா ," படம் சூப்பர் டா .சாந்திரம் வேற படம் வாங்கிட்டு வரியா? " நான் நொந்துப்போனேன். ச்சே, கவுத்துப் புட்டாளே என்று எண்ணிக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன் . மீண்டும் அவள் என்னை அழைத்தாள்.நான் உற்சாகமாய் திரும்பினேன்.அவள் அமைதியாய்  சொன்னாள் சிவா ," சாந்திரம் இங்கிலீஷ் படம் ஏதாவது வாங்கிட்டு வாடா " ச்சே மறுபடியும் கவுத்துப் புட்டாளே . நான் மீண்டும் நடக்க தொடங்கினேன் "சைலன்ஸ் சாங் "  என்று ஏதாவது இங்கிலீஷ் படம் இருக்குமா ? என்று நினைத்துக்கொண்டு.

Friday, August 03, 2012

மழை !


மேகத்தின் அழுகை ஓய்ந்தது!
பூமியின் தாகம்  தீர்ந்தது!

வெப்பம் மறைந்தது!
தெப்பம் நிறைந்தது!

கரும்பு,நெல் செழித்தன!
காளான்கள் விழித்தன!

ஏரி,குளம்  வழிந்தது! -உழவன்
உள்ளம் மகிழ்ந்தது!

அனல் காற்று அகன்றது!
புனல் நீரும் வழிந்ததால்!

பாதைகள் சுடும்வரை !
பள்ளிக்கு விடுமுறை!

இவ்வுலகம் இல்லை மழை இன்றி !
மனதோடு சொல்வோம் மழைக்கு நன்றி!

நிலா !


அம்மாவின் நெற்றிப்பொட்டு !
அப்பாவின் கைகடிகாரம்!
அக்காவின் கண்ணாடி வளையல் !
பாட்டி சுட்ட சுவையான அப்பம் !
பரிசாய் கிடைத்த சில்வர்  தட்டு !
ஊற்று நீராக இனிக்கும் தோட்டத்து கிணறு!
உடைத்தெடுத்த உண்டியல் காசு!
தமிழ் தந்த ஆயுத எழுத்து!

கிட்ட இருக்கும் இந்த வட்டங்களே போதும்!
எட்ட இருக்கும் நிலவே -நீ
எனக்கெதற்கு !

மழலை



தெறித்து விழும் மழை தூறல்
தெத்துப்பல் சிரிப்பு!

"சோ"வெனும் பெய்யும் மழை
ஓவெனும் அழுகை !

மழைநீர் பாயும் ஓடை
தள்ளி உடைத்த மீன் தொட்டி!

கார்காலமேகம் -பிஞ்சு
பாதம் களைத்த கோலம் !

குற்றால நீர் வீழிச்சி
கொஞ்சும் தமிழ் பேச்சி !

வானத்தில் பதிந்த வானவில்
கன்னத்தில் பதித்த முத்தம் !

அட, மழையில் நனைவதும்
மழலையில் நனைவதும் மகிழ்ச்சியே!

நானும் என் அம்மாவும் ..


அடுத்த பிறவியிலும் அவளே எனக்கு தாயாக வேண்டும் !
அழுத போது அவள் தந்த பால்!
நான் உறங்க இடம் தந்த அவள் தோல்!

நான் வென்ற போதெல்லாம் அவள் தந்த முத்தம்!
தேனாய் காதில் பாய்ந்த தாலாட்டு சத்தம்!

என் வலி கண்டு அவள் வடித்த கண்ணீர்!
என் குளிர் போக அவள் வாய்த்த வெந்நீர்!

கவலை மறந்து உறங்கிய அவள் மடி!
ஈரம் போக அவள் போட்ட சாம்பிராணி நெடி!

களைப்பு நீங்க அவள் தரும் காபி!
மனசு முழுசும் அவளால் கிடைக்கும் ஹாப்பி!

என எல்லாவற்றையும் மறுபடியும் பெற்றுக்கொள்ள அல்ல !
இவைகளுக்கெல்லாம் நன்றி செலுத்த இந்த பிறவி போதாது என்பதால்…………!

முயற்சி

காலம் கடந்தது ;கலங்கவில்லை ஷாஜகான்
கடுமையாக முயன்றான் ; கட்டினான் தாஜ்மஹால் !

ஆயிரம் சோதனைகள் தோல்வி; அழவில்லை எடிசன்
 அடுத்தடுத்து முயன்றான் ;அகப்பட்டது மின்விளக்கு!

 சரமாரி விமர்சனங்கள் ;சரியவில்லை சச்சின்
 சளைக்காமல் முயன்றான் ; சதத்திலேயே சதம் கண்டான்!

 உயிருக்கும் ஆபத்து ;தயங்கவில்லை ஆம்ஸ்ட்ராங்
உறுதியோடு முயன்றான் ;நிலவினை முத்தமிட்டான் !

 "முயற்சி " அதை நீக்கி பார்த்தால்
முழுநீள வரலாறும் , வெள்ளைநிற காகிதமே!

Friday, August 05, 2011

ஊர் பெயர் ஆராய்ச்சிகள் ..

ஆங்கிலேயர்கள் ஐரோப்பாவில் இருந்து கடல் வழியாக இந்தியாவந்து கடலோரம் ஒரு மாதாகோயில் கட்டினர் ..அவர்கள் வந்த அந்த வே (வழி ),ரொம்ப லாங்கா (தூரம் ) இருந்ததால் அந்த கோவிலையும் ,அந்த ஊரையும் வேளாங்கண்ணி என்று அழைத்தனர்... ஆக்சுவலா ஆங்கிலேயர் வந்தது கடல் ல ...சோ ,வே லாங் தண்ணி என்றுதான் அவர்கள் முதலில் அழைத்தனர் ,,பின்பு நன்செய் நிலம் நஞ்சை ,புன்செய் நிலம் புஞ்சை என்று மருவியது போல வேலாங்கதண்ணி என்றிருந்தது வேளாங்கண்ணி யாக மாறியது....இவாருதன் வேளாங்கண்ணி என்று அந்த ஊருக்கு பெயர் வந்தது ....

Tuesday, April 20, 2010

மனசாட்சி!

அவன்!
நான்!

அவனும் நானும் ஒன்றல்ல..
நானும் அவனும் ஒன்று!
நாங்கள் எங்கு சென்றாலும்
ஒன்றாகவே செல்வோம்...
நான் ஒரு வழியில்
அவன் ஒரு வழியில்..

அவன் சொல்வதை
நான் பல சமயங்களில்
கேட்பது இல்லை..ஏனெனில்
அவன் நல்லதை மட்டுமே சொல்கிறான்..
நானும் நல்லவன் தான்
என்ன? நடைமுறை வாழ்க்கை
என்னை சிலசமயம் கெட்டவனாக்கி விடுகிறது..

அவன் அனைவரையும்
அன்புடன் பார் என்கிறான்..
ஆனால் என்னால்
பொறாமையாக தான்
பார்க்க முடிகிறது...

சில இடங்களில்
நான் கடகடவென பேசி முடிக்கிறேன்..
அவன் அமைதியாக ...

சில இடங்களில்
அவன் பேச நினைக்கிறான்
நான் அமைதியாக...

உரிமை இல்லாத
பொருட்களை அவன்
உரசுவது கூட கிடையாது..
நானோ உடன் எடுத்து கொள்கிறேன்..

இப்படிதான்
இருவரும் ஒன்றாக
ஆனால் எதிரெதிராக ..
ஏனோ சில சமயங்களில் மட்டும் ஒத்து போகிறோம்..

இதோ இருவருமே
இறந்துவிட்டோம்..

ஐயோ நான் நரகத்தில்..
ஆம் அதிகம் பாவம் செய்திருந்தேனே..

அவன்?
அட ,அவனும் நரகத்திலா ?
நம்ப முடியவில்லை...
அவன் தான் ஒரு பாவமும்
செய்திருக்க வில்லையே

பின்புதான்
புரிந்து கொண்டேன்...
இறைவன்
பாவ புண்ணியங்களை
மனிதனிடமிருந்து கணிகிறான்.
அவன் மனசாட்சியிடம் இருந்து அல்ல...

ஆம் நான் மனிதன் ..
அவன் என் மனசாட்சி..!

சங்கு !

சுட்டாலும் வெண்மை
தருவது சங்கு !
இது பழசு .

தொட்டாலும்
பெண்மை தருவது
சங்கு !
இது புதுசு .

என்னவள் கழுத்து !

Wednesday, April 07, 2010

நானும் என் ஜோதி பாப்பாவும்..

அ,ஆ,இ,ஈ,உ,ஊ...
இதுதான் உயிர் எழுத்தாம்!
பாவம் தமிழ்க்கு
தெரியவில்லை.
என் உயிர் எழுத்து "நீ" என்று..!

நானும் என் ஜோதி பாப்பாவும்..

டேய் குட்டி ..
அவுங்களுக்கு
பிப்ரவரி'14 மட்டும் தான்...
நமக்கு
வருஷம் முழுதும்..!